கம்போடியா உலகத்தமிழர் மகாநாட்டில் இலங்கை அமைச்சரின் விசுவாசம்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 7, 2018

கம்போடியா உலகத்தமிழர் மகாநாட்டில் இலங்கை அமைச்சரின் விசுவாசம்!!


உலகத்தமிழர்களின் ஒன்றுகூடல் மகாநாடு கம்போடியா நாட்டில் கடந்த மாதம் 19ம் 20ம் திகதிகளில் நடைபெற்றது. இதற்கு தமிழர்கள் 60 நாடுகளில் இருந்து வருகை தந்து சிறப்பித்தனர். இந்த மகாநாட்டில் தமிழ் வரலாற்று அறிவியல் சம்பந்தமான விடையங்குளுடன் தமிழ் கலை, கலாச்சாரம் , பாரம்பரியம் ,
வாணிபம் போன்ற விடயங்களை ஆய்வு செய்தார்கள் . அதனாலே அரசியல் விடயங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இந்த மகாநாட்டை பற்றிய காணொளிகள் நேற்றைய தினம் எமது மின் அஞ்சல் முக்கவரிக்கு ஊடக நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
https://youtu.be/2NqoZ6JbGaE?t=738

பார்க்காதவர்கள் கீழ்காணும் கானொளி(Youtube) இணையத்தில் பார்க்கலாம். இந்த மகாநாட்டை தமிழ் நாட்டு தமிழர்களுடன் தென் கிழக்காசியாவில் வாழும் தமிழர் பலரும் சேர்ந்து நடத்தியிருந்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .
இந்த மகாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது 33 பேர் கொண்ட குழுவுடன் வருகை தந்து ஒரு சிறப்புரையும் ஆற்றினார். (ஈழத்தமிழர்கள் என்று சொல்லும்படியாக பேச்சாளர்களையோ அல்லது பார்வையாளர்களையோ காணமுடியவில்லை. அதனால்தான் என்னவோ முள்ளியவாய்க்கால் சம்பவங்கள் எதுவும் நினைவுகூ றப்படவில்லை.
இனி என் ஆதங்கத்துக்கு வருவோம்.

இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய சிற்றுரையில் கீழ்காணும் விடயங்களை பேசியிருந்தார் . ( கீழோயுள்ள இணைப்பில்  )

 " உலகித்தில் இன்று தமிழர்கள் 132 நாடுகளில் வாழ்கிறார்கள். இதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் (இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக ) புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் வாழ்வது சாதாரண வாழ்க்கையல்ல ! நல்ல வாழ்க்கை !!. இதை ஏற்படுத்தி கொடுத்தது ( யுத்தத்தை ) இலங்கை என்பதில் பெருமை கொள்கிறேன்."
இலங்கையின் இந்த புகழ்பாடத்தான் 33 பேருடன் ( சுற்றுலா ) கம்போடியா வந்தீர்களா ?
இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் " பெருவாழ்வை " அறியவில்லையா ?
இலங்கையில் இருந்து கொடுமைகளுக்கு தப்பியோடிய தமிழர்கள் மலேஷியா,தாய்லாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் படும் " பெருவாழ்வை " அறியவில்லையா ?
பாவம் நீங்கள் ! உங்களுக்கு தந்த பணியை செவ்வனே செய்துள்ளீர்கள்.!
நீங்கள் பார்க்கும் மந்திரி பதவிக்கு நன்றிக்கடன் செய்துள்ளீர்கள் !!
இனியாவது , வெளிநாடுகள் போகும்போது ஈழத்தமிழரின் சரித்திரத்தை
அறிந்துகொண்டு செல்லுங்கள். எங்களுக்கு நன்மை செய்யா விட்டாலும்
பறவாயில்லை . தீமையாவது செய்யாது இருங்கள். !!!!
வேதனையுடன்...
விக்டர் ராஜலிங்கம்

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)