குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட மூவர் கைது!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, July 17, 2018

குழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட மூவர் கைது!!

சமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 




இந்த காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட மீகலாவ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். 

மீகலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணன்கமுவ பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த காணொளியில் 1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (16) குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குழந்தையை கொடுமை படுத்திய குற்றம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர்களை நாளை (18) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மீகலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

                                                                                                  செய்தி: அத  தெரண

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)