யாழ் அரசாங்க அதிபரே!! எந்த விசயத்தையும் திட்டம் போட்டு செய்யனும்!! ?? அதிர்ச்சி புகைப்படம்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, July 4, 2018

யாழ் அரசாங்க அதிபரே!! எந்த விசயத்தையும் திட்டம் போட்டு செய்யனும்!! ?? அதிர்ச்சி புகைப்படம்!!

ரணில் விக்ரமசிங்கே எவ்வாறான நரித்தனங்கள் செய்து தமிழ் மக்களை தமிழ்த் தேசிய உணர்வில் இருந்து பிரித்து தரங் கெட்டவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்து வெல்ல வைத்து தமிழினத்தை அடிமையாக்கி வைக்கின்றார்

ரணிலின் நரிப் புத்தி மீண்டும் செயற்பட்டது!! விஜயகலாவின் பதவி பறிக்கப்பட்டது!!

புலிகளைப் பற்றி பேசி தனது பதவியை இழந்த விஜயகலா என தெரிவித்து தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைக் கொள்ளையடிக்கும் நரிப் புத்தியுடன் ரணில் இன்று விஜயகலாவைப் பதவி விலகச் சொல்லியுள்ளதாக தெரியவருகின்றது. விஜயகலாவுடன் மிக ரகசியமாக கலந்துரையாடி தமிழ் மக்களின் அனுதாப வாக்கைப் பெறுவதற்காக ரணில் இவ்வாறான செயற்பாட்டை செய்துள்ளதாக  நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து இவ்வாறு கூறினார். ‘விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர். 

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து கூறியுள்ளார். அந்த தேரருக்கு நடவடிக்கை எடுக்காமல் விஜயகலாவுக்கு நடவடிக்கை எடுத்து ரணில் மிகத் திறமையாக தனது வாக்கு வேட்டையை யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையால் தமிழ் மக்கள் விஜயகலாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என ரணில் நம்பியே விஜயகலாவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடாத்தி இவ்வாறு பதவி விலகச் சொல்லியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ரணில் எவ்வாறான நரித்தனங்கள் செய்து தமிழ் மக்களை தமிழ்த் தேசிய உணர்வில் இருந்து பிரித்து தரங் கெட்டவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்து வெல்ல வைத்து தமிழினத்தை அடிமையாக்கி வைக்கின்றார் என்பதை தமிழ் புத்திஜீவிகள் அறிவார்கள். யாழ் ஸ்ரான்லி வீதியில் கொம்மினிகேசனில் வேலை செய்த விஜயகலா மண்ணெண்ணெய் மகேஸ்வரனோடு காதலாகி கலியாணம் கட்டி அமைச்சராகிய வரலாறு அனைவருக்கும் தெரியும்.

இந் நிலையில் எந்தவித படிப்பறிவும் இல்லாத விஜயகலாவை இயக்குவது யார் என்பதும் விஜயகலாவுடன் நெருங்கிப் பழகும் முக்கியஸ்தர்கள் அறிவார்கள். இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை விஜயகலா வீரசிங்கம் மண்டபத்தில் புலிப் புராணம் பாடிய சம்பவம் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதோ பாருங்கள்....... யாழ் அரசாங்க அதிபர் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தை பிரதேச செயலகங்கள் பெற்ற போது 29ம் திகதி யூன் மாதம்  திகதி சீல் செய்யப்பட்டுள்ளது. யாழ் அரசாங்க அதிபரும் இதற்கு உடந்தையா????

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)