யாழ்பாணத்தில் பரபரப்பு! மீண்டும் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புகூடுகள்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, July 21, 2018

யாழ்பாணத்தில் பரபரப்பு! மீண்டும் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புகூடுகள்!!!

யாழ்ப்­பா­ணம் செம்­ம­ணிப் பகு­தி­யில் மண்­ணில் புதைக்­கப்­பட்­டி­ ருந்த நிலை­யில் மனித மண்டை ஓடு உள்­ளிட்ட மனித எச்­சங்­கள் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டன.

1998 இல் யாழ்ப்­பா­ணத்­தில் காணா­மற்­போன நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் மற்­றும் இளம் பெண்­கள் கொல்­லப்­பட்டு செம்­ம­ணி­யி­லேயே புதைக்­கப்­பட்­டார் கள் என்று குற்­றஞ்­சாட் டப்­பட்­டது.
இது தொடர்­பாக நடந்த வழக்­கில் செம்­ம­ணி­யின் பல இடங்­க­ளி­லும் தோண்டி 15 மனித உடல்­க­ளின் எச்­சங்­கள் முழு­மை­யான எலும்­புக்­கூ­டு­க­ளா­க­வும் எச்சங்­க­ளா­க­வும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

இந்­தப் பின்­ன­ணி­யில் நேற்­றும் மனித எச்­சம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து யாழ். நக­ரம் பர­ப­ரப்­பா­னது.
யாழ்ப்­பா­ணம், செம்­மணி வீதி­யில் நீர்த்­தாங்கி அமைக்­கும் பணி­கள் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­காக நேற்று ‘பெக்கோ’ இயந்­தி­ரம் மூலம் நிலம் தோண்­டப்­பட்­டது. அப்­போது மண்டை ஓடு, மற்­றும் எலும்பு எ்சங்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

நிலம் அக­ழும் பணி நிறுத்­தப்­பட்டு யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது. சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலி­ஸார் அந்த இடத்­துக்­குப் பாது­காப்பு வழங்­கி­னர்.

இன்று நீதி­மன்ற உத்­த­ர­வைப் பெற்று அந்த எலும்பு எச்­சங்­களை மீட்­க­வுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அத்­து
 டன் மேலும் அங்கு எலும்பு எச்­சங்­கள் இருக்­க­லாம் என்று சந்­தே­கிப்­ப­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

படை­யி­ன­ரால் பாலி­யல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்ட மாணவி கிரி­சாந்தி கொலை வழக்­கு­டன் அன்று வெளிச்­சத்­துக்கு வந்­தது செம்­ம­ணிப் புதை­குழி.
கிரு­சாந்தி கொலைக் குற்­ற­வாளி சோம­ரத்ன ராஜ­பக்­சவே செம்­ம­ணிப் புதை குழி தொடர்­பான உண்­மை­களை வெளியே சொன்­னார்.

செம்­மணி, அரி­யாலை, கொழும்­புத்­துறை ஆகிய இரா­ணுவ முகாம்­க­ளில் கொலை செய்­யப்­பட்­ட­வர்­களே செம்­மணி வெளி­யில் புதைக்­கப்­பட்­டி­ருந்­த­னர் என்று கூறப்­பட்­டது. பின்­னர் இந்த வழக்கு கிடப்­பில் போடப்­பட்­டு­விட்­டது.
18 ஆண்­டு­க­ளின் பின்­னர் செம்­ம­ணிப் பகு­தி­யில் மீண்­டும் மண்டை ஓட்­டு­டன் எலும்பு எச்­சங்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)