வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: மறுப்பு தெரிவித்த இராணுவ கட்டளைத் தளபதி!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, July 9, 2018

வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: மறுப்பு தெரிவித்த இராணுவ கட்டளைத் தளபதி!!


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இன்று தெரிவித்தார். 

யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது யாழில் வன்முறையில் ஈடுபடுவோருக்கம் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி இவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவத்தின் பின்புலத்தில் தான் யாழில் வன்முறைச்சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் பொய்யான செய்தி. 

இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிடுவோர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். 

ஆவாக்குழுவை சேர்ந்தவர்கள் என பலர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

எங்காவது இராணுவத்தினருக்கும் தமக்கும் தொடர்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்களா? எந்த ஆதாரத்தை வைத்து இராணவத்தின் பின்புலத்தில் ஆவாக்குழுக்கள் செயற்படுவதாக கூறுகின்றனர். 

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவ்வாறான குழுக்களுக்கு உடந்தையாக செயற்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை. 

யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுவருகின்றதே தவிர புதிதாக வடக்கிற்கு படையினர் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 

யாழ்ப்பாணத்தில் யுத்தம் முடிவற்ற பின்னர் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக பலர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். எனினும் அது முற்றிலும் பொய்யானது. 

தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்ககை படிப்படியாக குறைக்கப்பட்டுவருகின்றது. 

யுத்தம் முடிவுற்ற பின்னர் யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடவில்லை. பொலிஸாரே சிவில் சம்பந்தமான விடயங்கள் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றார்கள். 

அவர்களுக்கு உதவிகள் தேவைப்படின் பாதுகாப்பு அமைச்சுக்கு தொடர்பு கொண்டு எமக்கு இராணுவ கட்டளை தலைமையகத்தால் கட்டளை வழங்கப்பட்டால் மாத்திரமே நாம் சிவில் நடவடிக்கைளில் ஈடுபடமுடியும். 

எனினும் இவ்வளவு காலத்தில் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னர், நாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டில்தான் ஈடுபட்டுவருகின்றோம். 

நாங்கள் யுத்தம் முடிவுற்று 9 வருடங்கள் முடிவுற்றுள்ள நிலையில் இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வேலை திட்டங்களில் நாம் ஈடுபட்டுவருகின்றோம். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். 

(யாழ். நிருபர் சுமித்தி)
      அத தெரண

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)