தாயகம் திரும்பும் உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, September 17, 2018

தாயகம் திரும்பும் உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுவீடன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களும் இந்த கோர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குறித்த விபத்தில் சுவீடன் நாட்டு பிரஜையான 30 வயதான கமலநாதன் சிவரஞ்சனி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 32 வயதான காண்டீபன் யமுனா ரஞ்சனி, 56 வயதான இசை ஞானவதி யோகரத்னம், 13 வயதான காண்டீபன் டிசாலினி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து காரணமாக சுவீடனை சேர்ந்த 34 வயதான ஜேம்ஸ் கமலநாதன் மற்றும் ஆறு வயதான கமலநாதன் ஜெசிகா படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் யாழ்ப்பாணம் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொருவர் யாழ்ப்பாணம் செல்லும் போது ஏ-9 வீதியில் உயிரிழந்துள்ளார்.
தவிர கடந்த சில வருடங்களில் விடுமுறையை களிக்கவும், உறவினர்களை பார்க்கவும் இலங்கை வரும் பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக யாழ் தமிழர்கள் யாழ் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து விமானம் மூலமாக கட்டுநாயக்க வந்து இரவோடிரவாக சாரதியின் நிலையறியாமால் (தூக்கமின்மை) அவர்களுக்கு நேரம் ஒதுக்காமல் யாழ் செல்ல வற்புறுத்தப்படுகின்றனர்.

இதனால் தூக்க கலக்கத்தில் சாரதியும் வாகனத்தை செலுத்தி செல்கின்றார், அதனால் விபத்துக்களில் சிக்கி விலைமதிப்பற்ற உயிரை இழக்கின்றனர்.
புலம்பெயர் தமிழர்களே இது தொடர்பில் கவனம் செலுத்தி, மணித்தியாலயங்கள் கடந்தாலும் பரவாயில்லை வாகனங்களை கூலிக்கு அமர்த்தும் பொது சாரதியின் நிலையை அறிந்தும், அவர்கள் நேரம் கேட்டால் அதற்கான நேரத்தை ஒதுக்கி பொறுமையாக உங்கள் பயணத்தை தொடருங்கள் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)