மகிந்தவின் குதிரைப் பேர முகவராக மாறிய மூன்றெழுத்து ஊடக வியாபாரி!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, November 3, 2018

மகிந்தவின் குதிரைப் பேர முகவராக மாறிய மூன்றெழுத்து ஊடக வியாபாரி!!

மூன்றெழுத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஊடகத்தைக் கபளீகரம் செய்த புலம்பெயர் தமிழ் வியாபாரி(IBC Tamil) ஒருவர், தற்பொழுது மகிந்த ராஜபக்சவின் தரகராக மாறித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


போதைப் பொருள் கடத்தல், கடன் அட்டை மோசடி எனப் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகைப் பணத்தைப் பயன்படுத்திக் கடந்த காலத்தில் தொலைபேசி நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய குறித்த வியாபாரி, அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சதி நடவடிக்கை ஒன்றின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஊடகத்தைக் கையகப்படுத்தினார்.
மூன்றெழுத்துடைய இந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கடந்த சில ஆண்டுகளாக உலகத் தமிழர்களிடையே தமிழ்த் தேசிய எதிர்ப்புக் கருத்துக்களை நாசூக்காக விதைத்து வரும் இந்த வியாபாரி அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் அவ் ஊடகத்திற்கான அடுக்குமாடிக் கலையகத்தையும் திறந்தார்.
தற்பொழுது சிங்களப் பிரதமராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுள்ள பின்புலத்தில், அவரது தரகராக மாறியிருக்கும் இந்த வியாபாரி, மகிந்தவின் பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்திழுப்பதற்கான குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே மகிந்தவின் பக்கம் தாவிப் பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் வியாழேந்திரனின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் செய்திகளை இவ் வியாபாரிக்குச் சொந்தமான மூன்றெழுத்து ஊடகம் வெளியிட்டு வருவதோடு, மகிந்த அணிக்குத் தாவ மறுத்த செல்வம் அடைக்கலநாதன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
இது இவ்விதம் இருக்க, தமிழ் மக்களின் உடலில் சிங்களக் குருதி ஓடுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இம் மூன்றெழுத்து ஊடகம் ஒளிபரப்பிய நிகழ்ச்சியானது, ‘பாஸ் கொடுத்த உத்தரவின் பேரிலேயே தயாரிக்கப்பட்டது’ என்று, அந் நிகழ்ச்சியைத் தயாரித்த, தன்னைத் தானே ஒரு ஊடக மகா ரிஷி என்று காண்பித்துக் கொள்ளும் ஊடகவியலாளர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிகர் சந்தானத்தைத் தனது ஏவலாளியாகப் பயன்படுத்தி விட்டு ஏமாற்றிய ஆரியா போன்று தன்னை குறித்த வியாபாரி பலிக்கடா ஆக்கி விட்டார் என்று ஊடக மகா ரிஷி என்று கூறிக் கொள்ளும் ஊடகவியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)