வடக்கில் கஜா புயல் தாக்கம்!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Friday, November 16, 2018

வடக்கில் கஜா புயல் தாக்கம்!!

கஜா புயல் நேற்றுமாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ்.மாவட்டத்தில்ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் காரணமாக யாழ்ப்பாணம் அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் 12 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, அப்பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.
கஜா புயலினால் 770 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தையும் கஜா புயல் தாக்கும் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயலால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவநிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் நேற்று பெய்த மழையினால் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கஜா புயல் அச்சம் காரணமாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லையென மன்னார் மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்த மழையினால் மன்னார் மாவட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அதேவேளை, கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்டதர்மக்ககேணி மற்றும் பளைநகரப்பகுதிகளில் கஜா புயலினால் மரங்கள் மின்கம்பங்கள் மீதுமூறிந்து விழுந்ததில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு காணப்பட்டது.
எனினுட் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள்மின்சாசபையினருக்கு அறிவித்து அனர்த்ங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை சீர்செய்தனர்.
வடக்குமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய 'கஜா' புயலினால் கிளிநொச்சிமாவட்டத்திற்கு பாரிய பாதிப்புகள் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தெரிவித்தார்..

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)