தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்கள்!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, November 27, 2018

தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்கள்!!!


தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்

Screen Shot 2018-11-26 at 11.57.50 PM


தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை நின்று போராடி மண்ணில் மடிந்த மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.
தமிழ் இனம் விடுதலை பெற்றுவிட வேண்டும் என்று களமாடி இறுதிவரை போராடி மண்ணில் மடிந்துபோன எமது வீரப்புதல்வர்களை நினைவு கூருவதில் நாம் பெருமை கொள்கின்றோம். இம்மாவீரர்கள் போராட்டகளத்தில் நின்றபோது எமது மக்கள் நின்மதிப்பெரு மூச்சு விட்டு, சுதந்திரமாக வாழ்ந்த அந்ந காலங்கள் இன்று இல்லை.
போர் நடைபெற்றாலும், தன்மானம், சுதந்திரம் கலை பண்பாடு, பாதுகாப்பு என அனைதத்தும் மிக உச்சத்தில் இருந்து காலமது. எமது உரிமையை வென்றெடுக்க எந்நவித விட்டுகொடுப்புக்கும் இடம் கொடாது, எந்த வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது, எந்த ஆசை வார்த்தைகளுக்கும் அடிபணியாது எமது விடுதலைப்போராட்டத்தை சர்வதேசம் திரும்பிப் பார்க்கவைத்த மறவர் கூட்டம் அன்றிருந்தது.
இன்றோ, மண்ணின் தியாகங்களை மறந்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பழிக்காமல், தேசியத்தைவிற்று, தமிழர் இறைமையை தாரைவார்த்து, எமது சுதந்திர கனவை ஏறிமிதித்து, தமது குடும்பத்திற்காகவும், பணத்திற்காகவும் எமது இனத்தின் தலைமை என்று தமக்கு தாமே முடிசூடிக் கொண்ட தலைமையின் கைக்குள் எமது இனம் அடைபட்டு கிடைக்கின்றது.
சிங்கள ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு சாமரை வீசிக்கொண்டும், எமது இனப்பரம்பலை அழித்துக்கொண்டும் இருக்கும் சிங்கள அரசுக்கு துணைபோகும் கூட்டத்தை அழிக்கவும். மீண்டும் தமிழன் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ ன எம் மறவர்கள் மீண்டெழுந்து வரவேண்டும் என்று இன்று உலகத்தமிழனம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
எமது இன விடுதலைக்காக களமாடி மடிந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதே வேளை மாவீரர்களனின் விடுதலைக்கனவை வென்றெடுக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இன்றைய நாளில் உறுதி எடுத்துகொள்வோமாக.
நன்றி

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)