சிறையிலுள்ள ஞானசார தேரரை விடுவிக்கும் நாடகம் அரங்கேற்றம்: துணைபோகும் மைத்திரி! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, November 21, 2018

சிறையிலுள்ள ஞானசார தேரரை விடுவிக்கும் நாடகம் அரங்கேற்றம்: துணைபோகும் மைத்திரி!


Image
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கான நாடகமொன்று நவம்பர் 19-ஆம் திகதியான நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அரங்கேற்றப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அலரிமாளிகையில் நவம்பர் 20-ஆம் திகதி மாலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.
"மஹிந்த ராஜபக்ச பிரதமராக பொறுப்பேற்றவுடன் திகன கலவரத்தின் சூத்திரதாரியான மகாசோன் பலகாயவின் தலைவர் அமீத் வீரசிங்க விடுவிக்கப்பட்டார். இன்னும் சில தினங்களில் ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆகவே யார் திகன கலவரத்தின் பின்னணியில் இருந்தார்கள், யார் இனவாதிகளை பாதுகாத்து இனவாதத்தை தூண்டினார்கள் என இப்போது பொதுமக்கள் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.
"சிறைவாசம் அனுபவித்துவரும் சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரரை விடுவிப்பதற்காக நேற்றைய தினம் கடும்போக்கு பௌத்த பிக்குகள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுக்கு தாக்குதல் நடாத்துவது போன்று மக்களுக்கு காட்டிவிட்டு அவர்களை ஜனாதிபதி உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்" என்றும் இம்ரான் கூறுகின்றார்.
"சட்டம் ஒழுங்கு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என சகல அதிகாரங்களையும் தன்னிடம் வைத்திருக்கும் ஜனாதிபதி போராட்டம் நடாத்தியவர்களுக்கு தாக்குதல் நடாத்த தான் உத்தரவிடவில்லை என கூறுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது என்றும் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்,. இவ்வாறுதான் நல்லாட்சியிலும் எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திருப்பிவிட்டு நல்லவர் போல் மைத்ரிபால சிறிசேன மக்கள் முன் நாடகமாடினார் என்றும் சாடியுள்ளார்.
ராஜபக்சகளின் வழக்குகளை விசாரணை செய்துவந்த குற்றபுலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டது வெறும் ஆரம்பமே என்றும் கூறியுள்ள அவர், தொடர்ந்தும் இவர்களின் ஆட்சி நீடித்தால் வெள்ளைவேன் கலாச்சாரத்தையும் ஊடக அடக்குமுறையையும் மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்" என்றும் எச்சரித்திருக்கின்றார்.
திருடர்களை பிடிப்பதாகவும் இனவாதிகளை அழிப்பதாகவும் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஜனாதிபதி இன்று திருடர்களுக்கும் இனவாதிகளுக்கும் துணையாக நிற்பது கவலையளிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்களயே அபி என்ற சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பு உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் நவம்பர் 19 ஆம் திகதியான நேற்றைய தினம முற்பகல் ஜனாதிபதியிடம் கடிதமொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தண்ணீர் பீரங்கித் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான பௌத்த பிக்குகளை உடனடியாக ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிங்களயே அபி உட்பட கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களின் பௌத்த பிக்குகளுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட சிறிலங்கா ஜனாதிபதி பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஆராய்வதாக வாக்குறுதுி அளித்துள்ளதுடன், இந்த விடையம் தொடர்பில் பௌத்த பிக்குகள் கையளித்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)