உலகத்தமிழர்களுக்கு விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, December 24, 2018

உலகத்தமிழர்களுக்கு விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுமாறு முன்னைய முதல்வர் விக்னேஸ்வரன் வேண்டுகோள்
உலகத்தமிழர்களுக்கு விக்னேஸ்வரன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!வட மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடை மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும், கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தம்மாலான உதவிகளை வழங்குமாறு வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுவதாகவூம் அதனால் அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளையும் அடுத்த சில நாட்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தைகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான தேவையும் பெருமளவில் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், அவற்றையும் வழங்கி உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவூ மற்றும் உடை ஆகியவற்றை வழங்கும் நடவடிக்கைகளை பல அமைப்புக்களும், தொண்டு நிறுவனங்களும் முன்னெடுத்துவருவதால், வசதியான வழிகளில் தமது உதவிகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை மக்களின் கொடைகள் தேவையுடையோர் கைகளில் கிடைக்க வேண்டுமென்பதை ஊர்ஜிதப்படுத்துவது எல்லோரதும் கடமை என்றும் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)