தமிழ் மாணவியைக் கடத்தி மத மாற்றம் செய்த முஸ்லிம்கள்- கொதித்தெழுந்த மக்கள்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, January 8, 2019

தமிழ் மாணவியைக் கடத்தி மத மாற்றம் செய்த முஸ்லிம்கள்- கொதித்தெழுந்த மக்கள்!!

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை களுவன்கேணியில் ஆர்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடப் பேரணியில் நுற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.
தமிழ் மாணவியைக் கடத்தி இன மாற்றம் செய்த முஸ்லிம்கள்! கொதித்தெழுந்த மக்கள்!!
"வேண்டாம் வேண்டாம்" மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம்", வழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக, முஸ்லிம் சமூகமே உனது மத்தை எம்மீது திணிக்காதே, எமது பகுதியில் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இனமாற்றத்தை கூட்டாதே இனகலவரத்தை தூண்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மாணவியின் தந்தை வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார் கருத்து தெரிவிக்கையில், ”இந்த பாடசாலையில் உள்ள இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் எனது மகளுக்கு மூளைச் சலவை செய்து மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். எனது மகளை வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த விடயத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எனது மகள் வீடு திரும்பாவிடின் பாராதூரமான விளைவுகளை எதிர்நோக்கும் நிலை ஏற்படும். அந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மத ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
களுவன்கேணி கடலில் பிடிக்கப்படும் மீன்களில் பெருமளவானவை சகோதர முஸ்லிம் வியாபாரிகளுக்கே விற்பனை செய்செய்கிறோம். பல வருடங்களாக நாங்கள் எந்த வித இன வேறுபாடுகளுமின்றி தொழில் செய்கிறோம். ஒருசிலர் இன ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தாக தமிழ் - முஸ்லிம் உறவு பாதிக்கப்படும்.” என்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளித்தனர். கோரிக்கையைப் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
”குறித்த வியடம் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து சம்மந்தப்பட்டதாக கூறப்படும் ஆரிசியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். மாணவியின் பொற்றோருடனம் கலந்துரையாடியுள்ளோம். விபரங்களை திரட்டி விபரங்கள் அனைத்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.
பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாட்டில் வாழுகின் நாங்கள் மதம் சார்ந்த விடயங்களில் ஈடுபடுகின்றபோது சமாதானமான வழியினைப் பின்பற்ற வேண்டும். குறித்த மாணவி யாருடைய வீட்டில் இருக்கிறார் என்றால் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருக்க வேண்டும். மாணவியின் விடயத்தில் ஆசிரியங்களுக்கு சம்மந்தம் இருப்பதாக அறிந்தால் நாங்கள் கடுமையான நடவடிக்கையெடுப்போம்” என்றார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)