எந்தெந்த ராசிக்கு எந்தெந்த வகையில் இந்த வருடம் ஆபத்துகள் வரும்னு தெரியுமா..? - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, January 9, 2019

எந்தெந்த ராசிக்கு எந்தெந்த வகையில் இந்த வருடம் ஆபத்துகள் வரும்னு தெரியுமா..?

புது வருஷம் பொறந்தாச்சு. இந்த புது வருஷத்துல எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கனும்... இத தான் பலரின் ஆசையாக இருக்கும். என்ன தான் புது வருஷம் பொறந்தாலும், அதற்கான நல்லதும் கெட்டதும் ஒவ்வொவருவரின் ராசியை பொருத்தே அமைகிறது.
ஒரு சில ராசிக்காரர்களுக்கு எந்தவித நோய்களும் வராமல் நிம்மதியாக இருப்பார்கள். ஒரு சில ராசிகாரர்களுக்கு எண்ணற்ற நோய்களின் பாதிப்பு ஒரு தாக்கு தாக்கி விட்டு தான் போகும். கடந்த வருஷம் நோய்களால் அவதிப்பட்ட பலர் இந்த வருஷம் சந்தோஷமாக கூட இருக்க இயலும்.


இந்த வருடம், எந்தெந்த ராசிக்கு எந்தெந்த வகையில் ஆபத்துகள் வரும்னு தெரியுமா.?இவை அத்தனையும் ஒவ்வொரு ராசிகளின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல அவரவரின் நட்சத்திரங்களும் உள்ளன. சரி, இந்த வருஷம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்தவித பாதிப்புகள் வரப்போகுது, யாரெல்லாம் பயப்பட தேவையில்லை, யாரெல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேஷம்


மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இந்த வருஷம் நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பலவித பாதிப்புகள் இந்த வருடம் வர கூடும். உங்களின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. மேலும், ஆரோக்கியமான உணவுக்களை சாப்பிட்டு வாருங்கள்.


ரிஷபம் ரிஷபம்

கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏராளமான பாதிப்புகள் உங்களுக்கு வர தொடங்கும். ஆதலால், சாப்பிட கூடிய உணவின் மீது கவனம் இருத்தல் வேண்டும். சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு உடலில் சிறிது தேற்றம் இருக்கும்.


மிதுனம் மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சற்று அதிக ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். மேலும், உணவு பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மன அழுத்தம் அதிகரித்தால் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் உங்களை அண்டாமல் பார்த்து கொள்ளலாம்.


கடகம் கடகம்

இந்த 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு கொஞ்சம் மோசமான பின் விளைவுகள் வர கூடும். நீர்சத்து குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, தண்ணீரை அதிகம் குடியுங்கள்.
மேலும், இந்த ஆண்டு பலவித நல்ல மாற்றங்கள் உங்களின் உடலில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வேளையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் உடல் நலத்திலும் கவனம் செலுத்தினால் நல்லது.சிம்மம் சிம்மம்

உடல் பருமன் கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது. காரணம் நீங்கள் சாப்பிட கூடிய ஆரோக்கியமற்ற உணவுகள் தான். சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு கட்டாயம் உணவில் கவனம் தேவை.
மேலும், மன அழுத்தம் சற்று கூட கூடும். ஆதலால், எதெற்கெடுத்தாலும் கோபம் கொள்ளலாம் நிதானமாக கையாளுங்கள்.


கன்னி

கன்னி

இந்த வருஷம் ஒரு சில மாதங்களில் உங்களுக்கான பாதிப்புகள் அதிமாகவே உள்ளது. குறிப்பாக மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் போன்ற மாதங்களில் உங்களுக்கு உடல்நல பிரச்சினைகள் வர கூடும்.
சிலருக்கு மிக மோசமான அளவில் நோய்களின் தாக்கம் இருக்க கூடும். எனவே, நீங்கள் இந்த வருஷம் அதிக ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.


துலாம் துலாம்

உங்களின் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக எண்ணெய் அதிகம் சேர்ந்துள்ள உணவுகள் மற்றும் பாஸ்ட் ஃபூட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இந்த வருடம் வேளையில் அதிகம் பிசியாக இருக்கும் நீங்கள் உங்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.


விருச்சிகம் விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பலவித எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட கூடும். எனவே, கவனம் அதிகம் தேவை.
இந்த வருடம் உங்களின் உடல் எடையை எளிதாக குறைக்க இயலும். இதற்கு சத்தான உணவுகளை எடுத்து கொண்டு, தவறாது உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.தனுசு தனுசு

தனுசு ராசியில் உள்ள பெண்கள் தங்களது உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்ளல் வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு கருப்பை சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும்.
எனவே, மருத்துவரின் ஆலோசனையின் படி செயல்படுவது நல்லது. மேலும், காலை உணவை தவிர்க்காமல் இருக்க வேண்டும்.


மகரம் மகரம்

வெளி உணவுகளை நீங்கள் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் இவை உடல்நல கோளாறை ஏற்படுத்துமாம். மேலும், பயணத்தில் அதிக கவனம் தேவை.
போன வருடம் உடல் எடையை குறைக்க முடியாமல் திணறிய உங்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும்.


கும்பம் கும்பம்

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை உங்களுக்கு ரொம்பவே மோசமான காலம் தான். எனவே அதிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுக்கு இருக்க கூடிய கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் விட்டு விடுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வருடம் இது.


மீனம்

மீனம்

சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். இந்த வருடம் மோசமான உடல்நல பாதிப்புகள் ஏதும் உங்களுக்கு வராது. இருப்பினும் தெருக்களில் விற்க கூடிய உணவுகளை தவிர்த்தல் நல்லது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)