கொழும்பில் வெள்ளைவானில் 11 பேர் கடத்தப்பட்டமை தொடர்பில் சீ.ஐ.டி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, February 20, 2019

கொழும்பில் வெள்ளைவானில் 11 பேர் கடத்தப்பட்டமை தொடர்பில் சீ.ஐ.டி வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்!

இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் தொடர்பான வழக்கில் கடத்தப்பட்ட 11 பேரில், ஐந்து பேர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சிகள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், அந்த சாட்சியாளர்கள் குறித்த முகாம் அமைந்துள்ள இடத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு காட்டியுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர். இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவங்களுடன் ஸ்ரீலங்காவின் கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஸ்ரீலங்கா கற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட புலனாய்வாளர்களை கைது செய்தது. இந்த வழக்கில் கடற்படையின் அதிகாரிகளான மொத்தமாக 12 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பெப்ரவரி 20 ஆம் திகதியான இன்றைய தினம் நடைபெற்றது. இதன்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடத்தப்பட்ட 11 பேரில், ஐந்து பேர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் சிலர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சாட்சியாளர்கள் அந்த முகாம் அமைந்துள்ள இடத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு காட்டியுள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதயளிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதவானிடம் கோரிக்கை விடுத்ததாக, சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்டத்தரணி அச்சலா கருத்துத்தெரிவிக்கையில்,
இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு அமைய, 11 பேரில் 5 இளைஞர்கள். திருகோணமலை கன்சைட் முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை, சாட்சியாளர்கள் பலர் தெளிவான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர். அந்த சாட்சியாளர்களை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும் சாட்சியாளர்கள் அந்த முகாம் அமைந்திருந்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர். வழக்கின் பிரதான சந்தேக நபரான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் உட்பட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்ததோடு, அன்றைய தினம் வரை வழக்கு விசாரணைகளையும் ஒத்திவைத்தது.
இதேவேளை, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கடற்படை உறுப்பினரின் மனைவி உள்ளிட்ட உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவின் உதவியுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடன் கடந்த 12ஆம் திகதி சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். 
எவ்வாறெனினும் குற்றமிழைத்தவர்களாக கருதப்படும் நபர்களை சந்திக்க ஜனாதிபதிக்கு முடியுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்க வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரில் ஒருவரின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத்தந்திருந்த அவர், ஊடக வியாளர்களுக்கு இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று ஜனாதிபதியை சந்தித்ததோடு, இந்த வழக்கை திசைத்திருப்புதவற்கும் முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நாமும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். தவறிழைத்தவர்களை சந்திக்க ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் எம்மையும் சந்திக்க வேண்டுமென நாம் இதற்கு முன்னரும் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். ஆகவே எங்கள் பிள்ளைகள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி நேரம் ஒதுக்குவார் என நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)