கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, February 20, 2019

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி!!

கனடாவில்  ஹலிஃபெக்ஸ் (Halifax) நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை வேளையில் ஹலிஃபெக்ஸ் (Halifax) நகரில் உள்ள வீடு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், இதன்போது 3 மாதம் முதல் 17 வயது வரையுள்ள 7 குழந்தைகள் உடல் கருகி இறந்துள்ளனர் என ஹலிஃபெக்ஸ் (Halifax) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spryfield பகுதியில், Quartz Driveவில் உள்ள வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், இதன்போது அங்கு விரைந்த தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையிலும், பெண் ஒருவர் உயிராபத்தற்ற நிலையிலும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த வீட்டில் இருந்த 7 சிறார்கள் இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சிரியாவில் இருந்து அகதியாகவந்து குடியேறிய குடும்பம் என்று அறியப்படுகின்றது.

சம்பவ இடத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருவதனால், அந்த பகுதியூடான வாகனப் போக்குவரத்துகளை மட்டுமின்றி, பாதசாரிகளுக்கும் தடை விதித்துள்ள காவல்துறையினர், அந்தப் பகுதியை அணுக வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு குடும்பத்தினர் வசித்துவந்த இரண்டு மாடி ஏற்பட்ட இந்த தீப்பரவல் மிகவும் மோசமானது என்பதனைத் தவிர வேறு விபரங்கள் எவையும் உடனடியாக சம்பவ இடத்தில் உள்ள காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)