ஆசை காட்டி 2 சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகர்கள்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Sunday, March 3, 2019

ஆசை காட்டி 2 சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகர்கள்!!

காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துஷ்பிரயோகத்துக்கு உள்­ளாக்­கிய 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,
யாழ்ப்பாணம் சுன்­னா­கம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 14 வய­துச் சிறு­மி­யைக் காண­வில்லை என்று அவ­ரது தாயார் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.மறு நாள் சிறுமி வீதி­யில் சென்­ற­தைத் தயார் கண்­டுள்­ளார்.இந்நிலையில், சிறு­மியை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தி­னார். அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து, தாவ­டி­யைச் சேர்ந்த 17 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யமை தெரிய வந்­தது.சிறு­மி­யின் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் இளை­ஞ­னைக் கைது செய்­துள்­ளோம்.

யாழில் ஆசை காட்டி 2 சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகர்கள்!! இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி மற்றுறொரு 13வய­துச் சிறுமி உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்று இரவு தாம­த­மாகி வந்­துள்­ளார். அவ­ரி­டம் தாயார் விசா­ரித்­த­போது, சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 18 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

தாயார் முறைப்­பாடு செய்­தார். சிறு­மி­யி­டம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக 18 வய­து­டைய இளை­ஞ­னைக் கைது செய்­தோம்.இதே­வேளை, குறித்த சிறு­மியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 21 வய­து­டைய இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளதாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரிவியவந்தது.இத­னை­ய­டுத்து குறித்த இளை­ஞ­னை­யும் கைது செய்­துள்­ளோம் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலி­ஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News Source: NJ

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();



Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)