காம ஆசையினால் யுவதியிடம் 55 லட்சத்தை இழந்த புலம்பெயர் தமிழன்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Sunday, March 3, 2019

காம ஆசையினால் யுவதியிடம் 55 லட்சத்தை இழந்த புலம்பெயர் தமிழன்!!

யாழ்ப்பாணம் இருபாலையை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அவருக்கு பேஸ்புக் ஊடாக 30 வயதான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகினார்.

இருவரும் பேஸ்புக்கில் காதலித்து, திருமணம் வரை சென்றனர். திருமணத்திற்காக 60 வயது காதலன் ஜேர்மனியிலிருந்து இருபாலைக்கு வந்தார். 30 வயது காதலியும் இருபாலைக்கு வந்தார். அவர் தன்னை வவுனியா என்றே, காதலனிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

காதலியின் வங்கிக் கணக்கில் 15 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டதுடன், 35 இலட்சம் ரூபா பெறுமதியில் தாலி, நகைகள், தொலைபேசி, திருமண சேலையென்பவற்றை கொள்வனவு செய்திருந்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் யுவதி, அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து, காதலன் கமலநாதன் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை, காதலன் கமலநாதன் அதிரடி அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். நகைகளுடன் ஓடிப்போன பேஸ்புக் காதலி குறித்த தகவல்களை தருபவர்களிற்கு 250,000 இலட்சம் பணப்பரிசு தருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிசாரின் விசாரணையில் பேஸ்புக் காதலி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீழே உள்ளவர்தான் குறித்த ஏமாற்றிய பெண். யாராவது தெரிந்திருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

News Source: NJ

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)