யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு ஜூலை 29 கனடாவில் காலமானார்.நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி பல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பல முக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.உலகசெய்தி தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததோடு, அவர்களது உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஆளுமையாகவும் விளங்கியுள்ளார்.மூன்று பிள்ளைகளின் தந்தையான ஊடகவியலாளர் சபேஸ்வரன், யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையுடன் வெளியிட்டு, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது உடல் மறைந்தாலும், ஊடகத்துறைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும், அவர் பதித்த தடங்களும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் ,கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.
'மாடுகளை தேட சென்றனர்' - கர்நாடகாவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3
தமிழர்கள்; வனத்துறை விளக்கத்தை மறுக்கும் குடும்பம்
-
கர்நாடக வனத்துறையின் குற்றச்சாட்டை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்
மறுக்கின்றனர்.
2 days ago






No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.