Header Ads

speakermusicspeaker
Headlines News:

பிபிசி தமிழ்

Comments

.

TW

Author Details

**********

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றவர்களை வழிமறித்து அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - எழுதுமட்டுவாழ் பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு குடும்பத்தினர் காரில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது, எழுதுமட்டுவாழ் பகுதியில் கார் சென்றுகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களது காரை வழிமறித்துள்ளனர்.
பின்னர் காரில் இருந்தவர்களை அச்சுறுத்திஅவர்களிடம் இருந்து 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                                                                                                                                        நன்றி: NJ

இலங்கைக்கு பிரிட்டன் ஆயுதம்: தடுக்கும்படி எம்பியிடம் தமிழர் குழு கோரிக்கை!!!

லண்டன், ஜன. 19- 
இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்களின் குழு ஒன்று அந்நாட்டின் தொழிற் கட்சி எம்.பி.யான போப் பிளக்மனைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  
பிரிட்டன் தொடர்ந்து இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதோடு, ஸ்காட்லாந்து காவல்துறை இலங்கையின் விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சியளித்தது தொடர்பான ஆதாரங்களையும் அவரிடம் சமர்ப்பித்தனர்.
மேலும் சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்ரவதை முகாம்கள் போன்றவை குறித்தும் அவர்கள் இந்தச் சந்திப்பின் போது எம்.பி.க்கு விளக்கினர்.

புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதி  தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் இலங்கைக்கான ஆயுத விற்பனை எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது.
ஆயுத விற்பனை குறித்து போப் பிளக்மன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக அமைச்சரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்து செல்வதாகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில்  பங்கு பற்றி பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிரடிப் படைப் படைப் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில் இப்பயிற்சியானது முறைப்படி கண்காணிக்கப் படுகிறதா? என்பது குறித்துத்  தாம் ஆராய்வதாகவும் கூறினார்.
இதே வேளை, 2012 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கெமரூனுடன் தான் இலங்கை சென்றிருந்த வேளை, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நிலைப்பாடு குறித்து தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை தாமும் பிரதமரும் விரும்பியதாகவும் அரச அதிகாரிகள் உடன் இருந்தமையால் தமிழ்க் கூட்டணியுடனான சந்திப்பு சாத்தியமாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழர் தகவல் நடுவத்தின் பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை இலங்கைக்கான ஆயுத விற்பனையைத் தடை செய்வது தொடர்பில்  10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தம்முடைய குழு சந்திப்புகளை மேற்கொண்டு உள்ளதாகவும்,  மேற்படி சந்திப்புகள் யாவும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்  இன அழிப்புக்கு எதிரான  தமிழர் தகவல் நடுவகத்தின் இந்த முன்னெடுப்பானது, பிரிட்டனில் மட்டுமின்றி ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. ஏனைய  அனைத்துலக நாடுகளிலும் இது போன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து இலங்கைக்கான அனைத்துலக ஆயுத விற்பனைகள் அனைத்தையும் நிறுத்துவதே தமது குறிக்கோள் எனவும் விளக்கினார்.
தொடர்ந்து ஆயுத விற்பனை நிறுத்துதல் தொடர்பாக இயக்கத்தில் இணைய விரும்பும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பிரிட்டன் தகவல் நடுவகத்தினை தொடர்பு கொள்ளும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

பேருந்துல இப்படி உங்களுக்கும் திருவிளையாடல் நடந்தால் தயவு செய்து விடாதீங்க!!!

பேருந்துல பயணம் செய்யும் போது நடத்துனர் உங்களுக்கு தர வேண்டிய மீதி ஒரு ரூபாய் ஆக இருந்தாலும் எதுவித தயக்கமும் இன்றி உங்களுடைய மிகுதிப்பணத்தை கேளுங்க.
நீங்க ஒண்ணும் அடுத்தவனுடைய பணத்தை கேக்கப்போறதில்ல. நீங்களோ அல்லது உங்களுடைய உறவுகளோ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு அது. அதனால எந்த வித தயக்கமும் இல்லாமல் உரிமையுடன் கேளுங்க. ஒரு ரூபாய் தான என்று அலட்சியமாக விட்டுடாதீங்க. அந்த மிகுதிப்பணத்தை கேட்கவும் முடியாம விட்டுடு போகவும் முடியாம பஸ் பிரயாணம் முழுக்க அவஸ்தை படுறவங்களுக்கு நான் சொல்றதுன்ர தாற்பரியம் புரியும்னு நம்புறேன்.

இன்னைக்கு பேருந்துல நெல்லியடியில் இருந்து CTP பஸ் எடுத்து ஆரியக்குளத்தில இறங்கனும்னு பயணச்சிட்டைக்கு நூறு ரூபாய் பணத்தை கொடுத்தன். nelliady-jaffna னு பயணச்சீட்டுல போட்டுடு பயணத்திற்கான பணமாக 3ருபாய் போட்டுடு மிகுதி 30 ரூபாய் தந்தாரு.

நான் கேட்டன் ஆரியக்குளத்தில தான் இறங்கனும் அதுக்கு பயணச்சீட்டுல jaffa னு போட்டிருக்கீங்கனு கேட்க ஆனைப்பந்தில இருந்து அதுக்கப்புறம் jaffna னு தான் போடுவாங்களாம். அது பற்றி எனக்கு தெரில. சரி அப்டி பாத்தாலும் மிகுதி 33 ரூபாய்க்கு 30 ரூபாய் தந்திருக்கீங்க னு சொல்ல பயணச்சீட்டை வாங்கி பின்னால 3 அப்டின்னு எழுதி தாராரு.

இவங்கள என்ன செய்ய? என்னோட 3 ரூபாய் வரப்போறதில்ல கவலையாக இருக்கிறது. ஆனா நடத்துனர் இதை எதிர்பாத்திருக்க மாட்டார். அதுக்காக சந்தோச பட்டுக்கிறேன்.
ஆகவே உங்களிடம் எனது பணிவான வேண்டுகோள். மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்காம கேள்வி கேக்க வேண்டிய இடத்தில கேளுங்க.

யாழில் 30 லட்சம் சொத்தினையும், பொங்கலையும் இழந்த பெண்மணி!!!


கொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார்.

கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில் வசிக்கும் கணவனும் மணைவியும் தனியாக வாழும் குடும்பத்தினர் அண்மையிலேயே பிள்ளைகளிடம் லண்டன் சென்று திரும்பியிருந்தனர் .

இந்த நிலையில் தைப் பொங்கல் தினத்தன்று பொங்கலிற்காக அதிகாலையில் எழுந்த வீட்டின் கதவுகளை திறந்து கோலம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தவேளையில் வீட்டின் பின் கதவு வழியாக உள் நுழைந்த திருடர்கள் இத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலையில் எழுந்த பெண்மணி வீட்டின் வாசலில் கோலம் இடும் பணியில் நீண்ட நேரம் ஈடுபட்டிருந்துள்ளார் . இந்த சமயம் கணவர் உறக்கத்தில் இருந்துள்ளார்.

அச் சமயம் வீட்டின் கதவு வழியாக உள்நுளைந்த கொள்ளையர்கள் சாமி அறையில் அலுமாறியில் நகை மற்றும் பணம் என்பவை வைக்கக்பட்டிருந்த பணப்பையினை களவாடியவாறு வீட்டின் மதிலினால் ஏறித் தப்பியோடியுள்ளார்.

குறித்த கொள்ளை தொடர்பில் கருத்து வெளியிட்ட வீட்டின் உரிமையாளர் தர்மராயா
'நான் உறக்கத்தில் இருந்தபோது அதிகாலை 6 மணியை அண்மித்தவேளையில் பதற்றத்துடன் மனைவி என்னை எழுப்பி விடயத்தினை தெரிவித்து பணம் நகை என்பன வைக்கப்பட்டிருந்த கைப் பையினைக் கானவில்லை எனக் கூறியபோதே விடயத்தினை அறிந்துகொண்டேன்''
.
எமது பிள்ளைகளிடம் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் பிள்ளைகள் தந்த நகைகள் எமது நகை என 55 பவுண் நகை வைத்திருந்தோம் அத்தோடு காசாக ஆயிரம் பவுண்ஸ்சும் 30 ஆயிரம் ரூபாவும் என அனைத்தும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் செல்லும்போது சாமி அறையில் எடுத்து வந்த பணப்பையினை வீட்டின் பின் பகுதியில் வைத்து தேடுதல் நடாத்தி அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை மட்டும் கைப்பையில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு இடம்பெற்ற திருட்டினை அறியாத பெண்மணி கோலம் நிறைவடைந்து வீட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.
அதன்போது சாமி அறை திறந்துள்ளதனை அவதானித்து ஓடிச் சென்று பார்த்தவேளை அலுமாரி திறந்து உள்ளதனை கண்டு பதற்றத்துடன் அவதானித்துள்ளார்.

அலுமாரியில் இருந்த பணம் , நகைகள் வைத்திருந்த கைப்பையை கானாது கணவரை அவசரமாக எழுப்பி விடயத்தை தெரிவித்து தேடியவேளையிலேயே கொள்ளை இடம்பெற்றதனை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு முறையிடப்பட்டதனைத் தொடர்ந்து பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தி: NJ

சுமந்திரன் தேர்தலுக்கு பணம் தெண்டலுக்கு லண்டன், கனடா செல்கின்றார்(வருகின்றார்).

ரணில், திறைசேரியில் சட்டத்திற்கு எதிராக பணம் எடுத்ததன் காரணமாக பல லட்சம் கோடி ரூபாக்கள் காணமல் போய்விட்டதால் ரணில் இம்முறை த. தே. கூட்டமைப்புக்கு பணம் கொடுக்க முடியாமையால், சுமந்திரன் பணம் தெண்டலுக்கு லண்டன், கனடா செல்கின்றார்(வருகின்றார்).
இவர் லண்டனில் £ 50,000 உம், கனடாவில் $ 100,000 சேகரிக்க முற்படுகின்றர்.

இவருக்கு பணம் கொடுப்பது தமிழரின் அழிவுக்கு கொண்டு போய்விடுமா என்பதனை ஆலோலிசித்து தான் பணம் கொடுப்பவர்கள் தமது பணப்பையை திறக்க வேண்டும்.
வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிறிலங்காவில் நடக்கும் தேர்தலுக்கு பணம் கொடுப்பது சிறையில் போகக் கூடிய குற்றமா? என்பதை முதலில் அறிய வேண்டும்.
அமெரிக்காவில் நடக்கும் தேர்தலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கொடுப்பது குற்றமாகும். இந்த குற்றம் 5 வருட சிறையாகும்.
இதை மறுபக்கும் பார்க்கும் போது குற்றம் என்பதை கனடா, லண்டன் வாழும் தமிழர்கள் சட்ட புத்தகத்தை வாசிக்க வேண்டும்
தமிழரசுக் கட்சியை எனிவரும் தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் தமிழர்கள் இறையாண்மையை (Soverinity) இழந்து அடிமையாகவே வாழவேண்டிவரும்.
சுமந்திரனின் கொள்கையானது தமிழ் இறையாண்மையை (தமிழரின் அதிகாரங்கள்) இல்லாமல் செய்வது மட்டுமல்ல தமிழ் இனத்தை அழித்துவிடும்.
1.சுமந்திரன் பௌத்திற்கு முதல் இடம் கொடுப்பது சிங்கள பௌத்தர்கள் தவிர ஏனையை யாவரும் தமது இறையாண்மையை இல்லாதொழிக்கும்.
உதாரணமாக, நல்லூர் கோவில் அருகில் ஒரு புத்தர் சிலையை வைத்து காலப்போக்கில் அதனை பெரிய பௌத்த கோவில் ஆக்கும் போது , பௌத்தற்கு முதலிடம் என்று நல்லூர் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றும் நிலையோ, அல்லது உடைக்கவோ அல்லது சிறிய கோவிலாக்கும் நிலையோ ஏற்படும்.
2.சுமந்திரன் வடகிழக்கு இணைப்பு இப்போது முடியாது என்று பலகாலம் சொன்னார். இப்போ முஸ்லீம் மக்களுடன் யாழ் நூலகத்தில் கூட்டம் வைத்த பின்னர், இயலுமாயின் வடகிழக்கை இணைத்து பாருங்கள் என்றார். அதாவது "இயலுமென்றால் பண்ணிப்பார்." என்றார்.
வடகிழக்கு இணைப்பில்லாவிடில் சில வருடங்களில் பலகவீனமான கிழக்கு தமிழர்களின் பேரப்பிள்ளைகள் சிங்கள அல்லது முஸ்லீம் பெயர்களை கொண்டு விடுவார்கள்.
உதாரணமாக தமிழசுக்கட்சியின் பொது செயலாளர் துரைராஜசிங்கத்தின் பேத்தியின் கடைசி பெயர் பதியுதீனும், பேரனின் பெயர் புஞ்சிபண்டாவுமாக இருந்தால், துரைராஜசிங்கம் இதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்க வேண்டும்.
எங்கள் பதில்: முதலில் சுமந்திரனை தமிழரசுக்கட்சியில் இருந்து விலக்க வேண்டும்.
3.தமிழர்களுக்கு சமஷ்டி இல்லை. தமிழ் பெயர் பலகையில் ஒன்றும் இராது. ஆனால் சிங்கள பெயரில் " ஒற்றையாட்சி" அல்லது " எக்கிய ராச்சிய"என்று இருக்கும். சிங்களத்தில் உள்ளதுதான் சிங்கள நாட்டின் சட்டம்.
சுமந்திரன் சொல்லுகின்றார், அவர் "ஒன்று பட்ட நாடு" வரைவிலக்கணம் கொடுத்துள்ளாராம் ஆனால் எக்கிய ராச்சிய வின் தமிழ் மொழி பெயர்ப்பு ஒற்றையாட்சி. அப்படியானால் அவர் எனி நீலத்தை பச்சை என்றும் வரைவிலக்கணம் கொடுக்கலாம்
சிங்கள நீதிபதிகள் தான் எல்லாவற்றினையும் முடிவெடுப்பார்கள். ஞாபகம் இருக்கின்றதா கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக இடமாக இருந்தும் சிங்கள உயர் நீதிமன்றம் வடகிழக்கு இணைப்பை உடைத்தவர்கள். தலைமை நீதிபதி சரத்டி சில்வா சுமந்திரனின் நண்பர் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.
சிங்களத்தில் உத்தியோக பூர்வமாக ஒற்றையாட்சி என்று இருப்பதால் தமிழர்கள் கடந்து 70 வருடங்களாக பட்ட துன்பத்தினை தொடர்ந்தும் அனுபவிப்பார்கள்.
4.சுமந்திரன் கொழும்பில் இருந்து விசேட அதிரடி படைகள் (STF) உடன் யாழ்வந்து, தமிழ் பத்திரிகை சுதந்திரத்தை அடக்கப்பார்க்கின்றார்.
தினக்குரல் எழுதிய உண்மை: வடமராட்சியில் சுமந்திரன் பேசும்போது “சிங்கள மக்களின் அச்சம் நீங்கவே ஒற்றையாட்சிக்கு இணங்கினோம்.” இவருக்கு எதிராக உண்மையை எழுதினால் அவருக்கு கோபம் வரும்.
தினக்குரலின் உண்மையான செய்தியைப் பார்த்தவுடன் “திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்” என்று தினக்குரலை மிரட்டினார். இது ஒரு ஜனநாயகம் இல்லை.
புலம்பெயர் மக்களாகிய நாம் ஜனநாயக நாடுகளில் இருப்பதால் பலர் நன்கு கற்றவர்களாகவும், தனவந்தவர்களாகவும், போரினால் பாதிக்கப்பட்ட பலர் தமது கடந்த கால வடுக்களுடன் பயம் இல்லாமலும் பாதுகாப்பாகவும், வாழ்கின்றார்கள்.
ஜனநாயகத்தை மதியாதவர்கள் எமது தமிழர்களின் அரசியலில் தலையிடக் கூடாது .
எனவே
1.சிங்கள பௌத்தற்கு முதலிடம் கொடுத்து இறையாண்மையை அழித்தது.
2.வடகிழக்கு இல்லை என்பது கிழக்கில் தமிழ் இன அழிப்பு
3.சிங்களவர்களுக்கு பெயர்பலகையில் "ஒற்றையாட்சி" தமிழருக்கு பெயர்பலகையில் ஒன்றும் இல்லை என்பது பம்மாத்து.
4.தமிழ் பத்திரிகை சுதந்திரத்தினை அடக்க எச்சரிக்கை செய்பவர், பெரும் அழிவை சந்தித் த தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது.
சுமந்திரனுக்கு பணம் கொடுப்பதன் மூலம் அவர் தமிழ் வாக்குகளை விலைக்கு வாங்குவதால், தமிழரின் எதிர்கால நன்மைக்காக நல்ல கொள்கையுடன் (தனவந்தர் இல்லாத) வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க விடாமல் தமிழரை அழிவுக்கே கொண்டு செல்லும்.

தமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு!!!

சமூக சிதைவு என்பது ஒரு இனத்தின் கலாசார விழுமியங்களின் சீரழிவிலிருந்து பிறப்பெடுக்கின்றது. இத்தகைய சீரழிவுக்கு தூண்டுகோலாக விளங்கும் காரணிகளில் பிரதானம் பெறுபவை மது, புகைத்தல், மற்றும் போதைப் பொருட்களின் அதீத பாவனைகள் எனலாம்.
தற்கால தமிழ் சமூகத்தில் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு ஆழப்புரையோடியுள்ள இவ்வாறான துர்பாவனைகள், இவற்றின் தொடர்ச்சியாகப் பெருக்கமடைந்து வருகின்ற சமூக விரோத செயற்பாடுகள் அதாவது குற்றச்செயல்கள், அநீதிகள், அதர்ம காரியங்கள் முதலியவை நாட்டையே அபாயகரமான சூழலுக்குள் தள்ளிவிட்டுள்ளன.
வட மாகாணமே அதிலும் குறிப்பாக யாழ். மாவட்டமே மதுப் பாவனைகளில் மகத்தான இடத்திலிருக்கின்ற சாதனையையும் தக்கவைத்திருக்கின்றதெனில் எமது இனம் எங்கு நிற்கின்றது என்பதை அறிய முடியும். ஒரு நாட்டின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திக்கு கனதியான பங்களிப்பை நல்குவது இளவயதுப் பிரிவினரேயாகும். அத்தகைய வயதினரின் ஊழியமானது வீணடிக்கப்படுவதையும் அது தவறான திசையை நோக்கித் திருப்பப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந் நிலைமை மேலும் தொடராதிருக்கவும் சீரழிந்து வருகின்ற இன்றைய இளம் சந்ததியை மீள்கட்டமைக்கவும் சட்டம் ஒழுங்குகளை இறுக்கமடையச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகிறது.
சமகாலத்தில் மது, புகைத்தல், போதைப் பொருட்களின் மீதான நுகர்வு நாட்டமானது இளையோர் மத்தியில் அசாதாரண ரீதியாக பல்கிப் பெருகி வரும் நிலைமையானது எமது சமூகத்தினுடைய முதுகெலும்பின் உடைவுக்கு வழிவகுத்துள்ளது.
தற்போதைய ஊடங்களின் பேசுபொருளாகவும் பிரதானம் பெறுகின்ற செய்தியாகவும் விளங்கிவருகின்ற இப் பிரச்சினைகளானவை எதிர்காலத்தில் நம் சமூகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களுக்கு கட்டியம் கூறி நிற்கின்றதெனில் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. உலகமயமாக்கல் என்ற எண்ணக்கருவின் விளைவாக பல நன்மையான விடயங்கள் அறுவடை செய்யப்படினும் குறிப்பிடத்தக்கவாறான சில எதிர்கணியமான தாக்கங்களும் உணரப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது.
இவற்றை நாம் சாதாரண சம்பவங்கள் போல கருதி விட்டுவிட முடியாது. ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டென்பதனை உணர்ந்து அவற்றை நிவர்த்திக்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களுக்குண்டு.
மனித சமூகத்தை சீரழிக்கும் இவ்வாறான துர்ப்பாவனைகளின் கருக்கொள்ளலைக் கருவறுப்பதென்பது இலகுவான விடயமல்ல. உள சமூக பிரச்சினைகளாக நோக்கப்படும் இத்தகைய அதீத பாவனைகளுக்கு தூண்டுகோலாக விளங்கும் முக்கியமான காரணிகளைப் பார்த்தோமேயானால் சூழல்,காலம்,வயது,பால், தனிமனித ஆளுமை குடும்ப, சமூகக் காரணிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கின் அதீத பாவனைகள் போன்றவை இவ்வாறான துர்ப்பாவனைகளைத் தூண்டுபவையாக விளங்குகின்றன.
இவற்றை மிகவும் சுருக்கமாக நோக்கின், தற்போது காலமாற்றத்திற்கேற்ப நாம் வாழும் காலமும் சூழலும் மாற்றம் கண்டு வருகின்றன. எமது சமூகத்தினைப் பொறுத்தவரையில் கலாசாரக் கட்டுடைவின் விளைவை அனுபவித்து வரும் இவ்வேளையில் எம் இனத்தின் இருப்பும் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது.
இனத்துவ அடிப்படையிலான முரண்நிலைகள் வலுக்கொள்ளும் போதும் ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு - பறிக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் மேலெழும் போதும் ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வெளிக்கிளம்பும் எதிரான உணர்வலைகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றின் செயல் வீச்சத்தை கட்டுப்படுத்தவும் எழுச்சியுடனான பயணிப்பினை திசைமாற்றவும் அதிகார வர்க்கம் முதலாளித்துவ சிந்தனையின்பாற்பட்டு கையாளும் உத்திகளுள் ஒன்றாக விளங்குவது, ஒடுக்கப்படும் இனத்தின் பண்பாட்டில் - இன அடையாளங்களில் சிதைவை ஏற்படுத்துவதாகும்.
கடந்த கால யுத்தப்பாதிப்பின் விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் அவர்களது உளவுரணைச் சிதைத்துள்ள யுத்தப் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கான வடிகாலாக மது மற்றும் போதைப் பொருட்கள் மீது தமது நாட்டத்தை செலுத்துவர். இது எல்லோருக்கும் பொருந்தும் பொது இயல்பாகும். இது போன்ற துர்நடவடிக்கைகளுக்கான களத்தை, சந்தர்ப்பத்தை, வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கையில் அவற்றின் பாவனை வீச்சமானது வேகமாக உயர்வடையும்.இந்நிலையானது தொடரும் போது நீண்ட காலத்தில் சமூகக் கட்டமைப்புச் சிதைவை ஏற்படுத்தும்.
அடுத்து ,வயது மற்றும் பால் போன்ற காரணிகளை நோக்கினால், இளவயதுப் பிரிவினரிடத்தே அதிலும் ஆண்களிடத்தே இத்தகைய போக்குகளுக்கு அடிமைப்படும் தன்மை அதிகம் காணப்படுகிறது. இவர்கள் நன்மை தீமைகளை பகுத்தாய்ந்துணரும் மனப்பாங்கு குறைந்தவர்கள்,எதிலுமே வேகம், ஆர்வம் தூண்டற்பேறு, எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை, எதையுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல், துடிப்பு மற்றும் வன்முறை மீது அதிக நாட்டம்; காணப்படுவதுடன் எதிர்காலம் பற்றிய பிரக்ஞை, வாழ்க்கை பற்றிய புரிதல்கள், பொறுமை என்பவை மிகவும் குறைவாகவே காணப்படும்.
இவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அடித்தளமானது நிர்ணயம் செய்யப்படுவது இவ் வயதிலேயேயெனலாம். எனவே இவ்வாறான தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படும் வயதினராக காணப்படுவதனால் மது, போதைப் பொருட்களின் பாவனை வீதமானது இந்த வயதினரிடையே அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமன்றி இவ்வகையான துர்ப்பாவனைகளுக்கு அடிமைப்படுவோர் இலகுவில் அவற்றிலிருந்து விடுபடமுடியாது வாழ்க்கை முழுவதும் நிழல் போல தொடரும் அபாயமும் உண்டென்பதை மறுதலிக்க முடியாது.
மேலும் ஒருவரது தனிமனித ஆளுமைப் பிறழ்வுளும் இத்தகைய பொருட்களின்பால் மனமானது ஈர்க்கப்பட காரணமாகின்றது. மனித ஆளுமையானது ஒருவனுக்கு பிறப்பிலிருந்தே அமையும் தன்மை பொருந்தியதுடன்; அதன் வளர்ச்சியானது சிறுபிராயத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. மேலும் பரம்பரையலகுகளும் மரபியல்சார் விடயங்களும் காத்திரமான பங்கினை வகிக்கின்றன.
பெற்றோர் இத்தகைய தீய பழக்கங்களுக்குட்பட்டிருப்பின் அவர்களது சந்ததிக்கும் கடத்தப்படும் அபாயமும் உண்டென்பதுடன் குடும்பத்தில் மட்டுமல்லாது உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் முதலானோருக்கு இப் பழக்கங்கள் இருக்கும்போது அதனைப் பின்பற்றி ஏனையோரும் தொடரும் நிலைமையும் உண்டு. மேலும் இன்றைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் இவற்றுக்கு அடிமைப்படும் பண்பும் பலமாக காணப்படுகிறது. அதாவது தற்கால நவீன திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இணையத்தளங்கள் குறிப்பாக சமூக வலைத் தளங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் முதலானவற்றின் தவறான பயன்பாடுகள் அதிகரித்து வருவதானது இவற்றுக்கு அடிமையாகும் சாத்தியத் தன்மையை அதிகரித்துள்ளது.
இத்தகைய ஊடக சாதனங்களின் பயன்பாடுகள் வேகமெடுத்து வருகின்றமை மக்களின் பெறுமதியான நேரத்தினை விழுங்கி வருகின்றமை துரதிஸ்டவசமானது. தற்போதைய திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் காட்சிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் அனைத்தும் மக்கள் மனங்களில் நச்சு விதைகளையே விதைக்கின்றன.
தற்போது அத்தியாவசிய தேவையாகிவருகின்ற இக்காண்பிய வடிவங்களில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் மனித விழுமியக் கூறுகள் மற்றும் ஆக்கபூர்வமான விடயங்கள் என்பவை கானல் நிராகி வருவதுடன் மனித சமூகத்தை சீரழித்துவருகின்ற மது, புகைத்தல், போதைப்பொருட்களின் பாவனைகளுக்கான தூண்டல்களுக்கு அதிகம் தூபமிடப்படுகின்றன எனலாம்.
உடல், உள, சமூக ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் “மது, போதைக்கு அடிமையான நிலை” என்பதற்கான விளக்கத்தை விபரிக்கையில் National council on Alcoholism and Drug Dependence எனும் சர்வதேச அமைப்பானது கீழ்வருமாறு விபரித்துள்ளது. “மதுவைக் குடிக்கும் அல்லது போதையை உள்ளெடுக்கும் பழக்கத்தில் கட்டுப்பாடின்மை, எப்போதுமே மது, போதைவஸ்து சார்ந்த நினைப்பு, தீங்கு விளைவிக்கும் ஏது நிலைகள் இருந்தபோதும் கூட அவற்றை உள்ளெடுப்பது மற்றும் சிந்தித்தலில் நிலை குலைவு போன்ற அறிகுறிகள் கொண்ட முதன்மையான நீடித்த நோய்” என வரையறுத்துள்ளது. ‘Diagnostic and Statistical Manual of Mental Disorders’ என்றஉளவியல் பருவ இதழில் “பாதக விளைவுகளிலிருந்தும் திரும்பத்திரும்ப அளவுக்கதிகமாகவும் தவறாகவும் பயன்படுத்துவதையும் அவற்றை பயன்படுத்துவதை திடீரென நிறுத்தினால் ஏற்படும் அறிகுறிகள் எதிர்விளைவுகள் தென்படல் மற்றும் பயன்படுத்துவதிலுள்ள அடக்கமுடியாத பேராசை போன்றவற்றின் ஒருங்குசேர்ந்த அணுகுமுறையை அடிமை: தங்கியிருக்கும் நிலை எனக் குறிப்பிடப்படும்.
இத்தகைய துர்ப் பாவனைகளினால் ஏற்படும் உடல்சார்ந்த விளைவுகளை நோக்குகையில் கல்லீரல் பாதிப்பு கணைய அழற்சி, காக்காய் வலிப்பு, பன்மை நரம்புகளின் இயக்கத்தடை (polyneuropathy) மதுசார் மறதிநோய், அறிவாற்றல் இழப்பு, இதய நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள், வயிற்றுப்புண், பால்வினை செயல்ப்பிறழ்வு, இதயக்குழாய் நோய்கள், நரம்புமண்டல பாதிப்புகள் கடுமையான புலனுணர்வு சார் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதுடன் இறுதியில் மரணம் கூட சம்பவிக்கலாம்.
இவற்றின் பாவனைகளால் எற்படும் உளம் சார்ந்த சீர்குலைவுகளை நோக்குகையில் நீண்டகாலத்திற்கு மது, போதைப்பொருட்களை பயன்படுத்துகையில் பலவகையான மனநல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். தொடர் பாவனையால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து மூளையின் செயற்பாட்டை பாதிக்கும். இதனால் மனநிலை வெகுவாக பாதிப்படையும். பொதுவாக மனக்கலக்கம்,சிந்தனைக்குழப்பம்,மனப்பதட்டம், தவிப்பு, மனச்சோர்வு, மன அழுத்தம்,மன அமைதியின்மை, ஆளுமைச்சிதைவுள் போன்ற மனச்சீர்கேடுகள் ஏற்படும். அத்துடன் இவற்றைத் திடீரென நிறுத்துகையிலும் இதுபோன்ற மனப்பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே படிப்படியாகத் தவிர்க்கும்போது இவை மறைந்துவிடும்.
மேலும் மூளையில் நரம்பு வேதியல் முறை பாதிப்படைந்து மனச்சிதைவு நிலை தோன்றலாம். மது,போதையை நிறுத்தியபின்பும் தொடரும் சாத்தியமும் உண்டு. கடுமையாக இவற்றிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமுண்டு. இவர்கள் தற்கொலை செய்வதற்கான சூழிடர் நிலை அதிகமிருப்பதற்கான காரணம், மூளை வேதியல் மாற்றமடைந்து உயிரியல் சார் உருக்குலைவு, சமூகத்தினின்றும் தனிமைப்படல், மிகையச்சம் என்பவற்றால் தற்கொலை முயற்சியில் இறங்குவதற்கான தூண்டற்பேறு அதிகமாக இருக்கும்.
பொதுவாக இளவயதினரே அதிகம் தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். மேலும்,இன்று உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 50 சதவீதமானவை மது, போதைக்கு அடிமை நிலையினால் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சுருங்கிய தீர்வுகளுடன் கூடிய அவசரமான முடிவெடுக்கப்படுவதற்கு மனம் உந்தப்படுவதால் வாழ்வமைதி சீர்கெட்டு தற்கொலையில் ஈடுபட எத்தனிக்கின்றனர்.
இறுதியாக போதை தருகின்ற போதையால் பாதை மாறும் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு சமூகத் தலைவர்களை சார்ந்தது.இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தின் சிற்பிகள். நாளைய சமூகத்தை வழிநடத்த வேண்டியவர்களே இன்று பாதை மாறிச்செல்லும் போது நம் எதிர்கால சந்ததியின் நிலை பரிதாபகரமானதாகவே இருக்கப் போகின்றது. இன்று நடைபெற்றுவரும் குடும்பவன்முறை அதனால் விளையும் விவாகரத்துகள், அவர்களது பிள்ளைகள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்கள், சமூக விரோத செயற்பாடுகள், வீதி விபத்துகள் அவற்றின் வழியான உயிர் அவயவ இழப்புகள், பொருளாதார நெருக்கடிகள், சமூகத்தில் இவர்களுக்கிருக்கும் ஆறாத வடு என பிரச்சினைகள் நீண்டுகொண்டே செல்கின்றன. அத்துடன் பாலியல் வன்முறைகளும் உச்சம் பெறுவதுடன் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களும் வகைதொகையின்றி நடைபெறுவதற்கும் சிறைச்சாலைகள் அத்தகைய குற்றங்களால் நிரம்புவதற்கும் வழிசமைக்கின்றன. உலக சுகாதார நிறுவன தகவலின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 வீதமான செலவுகள் மதுப்பாவனைகளால் ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்வதற்காக செலவழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே சமூகத்தை ஏன் நாட்டையே சீர்குலைவுக்குள்ளாக்கும் இத்தகைய மது, புகைத்தல், போதைப்பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிகம் சிரத்தை கொள்வதுடன், நாட்டின் நீதித் துறையானது விழிப்புடன் செயற்பட்டு சட்டம் ஒழுங்ககளை இறுக்கமடையச்செய்து கட்டுப்படுத்த முன்வரும்போது நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்கள் பெருமளவால் குறைந்து எமது நாடு சொர்க்கபுரியாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.    

                                                                                          © Copyright Malarum 

இராணுவத் தளபதிக்கு சவால் விடுத்தார் சந்தியா எக்னலிகொட!!!

இராணுவத்தினருக்கும், கொலையாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துவரும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சவால் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்ற நிலையில் அதற்கான முழுப்பொறுப்பையும் இராணுவ புலனாய்வுப் பிரிவே ஏற்கவேண்டும் என்றும் சந்தியா எக்னலிகொட வலியுறுத்தினார்.
கேலிச்சித்திரக் கலைஞரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தொடர்பான வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் இந்தக் கூற்று உண்மையாகியிருப்பதாக சந்தியா எக்னலிகொட இராணுவத் தளபதிக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை வழங்கிய கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் தனது கணவரான பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் விவகாரத்தில் அரசியலின் மேலிடத்திலிருந்து விடுக்கப்படுகின்ற அழுத்தம் காரணமாக விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது சந்தியா எக்னலிகொட கூறினார்.
சந்தேக நபர்களான அதிகாரிகளுக்கான விளக்கமறியல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அண்மையில் தனது அதிருப்தியை வெனியிட்டிருந்த நிலையில் அதனூடாக சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதாக விருப்பநிலை தெளிவாகின்றது என்றும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பான தகவல்களை மூடிமறைக்கும் இராணுவ அதிகாரிகள் உண்மையிலேயே கொலைகாரர்கள் மற்றும் குற்றவாளிகள் என்பதை சுட்டிக்காட்டிய சந்தியா எக்னலிகொட, இது தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Featured

Contact

சக்தி செய்தி

N1st Tamil

 

டெங்கு ஒழிப்பு

?&max-results=6">Index »'); document.write('

?&max-results=6">Berita Misteri

');
  • ?max-results="+numposts1+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts1\"><\/script>");
?orderby=published&alt=json-in-script&callback=showfeaturedpostswiththumbs'>

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Breaking

+21
°
C
H: +21°
L: +10°
Scarborough
Thursday, 19 October
See 7-Day Forecast
Fri Sat Sun Mon Tue Wed
+18° +19° +16° +14° +14° +
+ +10° +11° +10° + +
Copyright © 2018. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modify By TPI Distributed by Radio. | Proudly powered by Blogger