வீடுகள் தோறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் சுடரேற்றி நினைவுகளை அனுசரித்தனர் மக்கள்! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Tuesday, May 18, 2021

வீடுகள் தோறும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் சுடரேற்றி நினைவுகளை அனுசரித்தனர் மக்கள்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எழிமையாக நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.



போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று(17) நள்ளிரவு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், நிலைமைகள் சுமூகமில்லாத விடத்து மாற்று வழியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று ஏற்கனவே பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு இணங்க பிரத்தியேகமானதொரு இடத்தில் இரகசியமாக அந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தலை சுகாதார முறையாக இன்று(18) நினைவேந்தும் பகுதிகள் உள்ளடங்கலாக, பொது முடக்கம் அறிவிப்பு விடுக்கப்பட்டதாள் மக்கள் மற்றும் உனர்வாளர்கள் அனைவரும் தத்தமது இடங்களில் நினைவுகூர்ந்தனர்.

யாழ். பல்கலைக் கழகத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்





Source: Sooriyantv

படங்கள்: 

Thinakkural

Kanagaratnam Sugash

ப.தர்சானந்

Karunakaran Navalan

                  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot