சற்று முன்னர் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. களத்தில் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
Notre-Dame தேவாலயத்தின் கூரை தீடீரென 18:50 மணியளவில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் கூரை இடிந்து விழுந்துள்ளது.
தேவாலத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேவாலயத்தின் 93 மீற்றர் உயரமுள்ள அம்பு (கூரை) ஒன்று இடிந்து விழுந்துள்ளதா சற்று முன்னர் பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது தீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் Notre-Dame-de தேவாலயமானது மாபெரும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.
Maurice de Sully பேராயரின் பெரும் அழுத்தத்தின் பேரில், போப்பாண்டவர் அலெக்சாண்டர் III முன்னிலையில் 1163 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்தத் தேவாலயம் பல சோதனைகளைச் சந்தித்தாலும், பரிஸ் மக்களின் சாட்சியமாக எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
இதற்கு முன்னர், முக்கிய தேவாலயாக விளங்கிய Saint-Etienne தேவாலயம், பெருந்திரளான மக்களை உள்ளடக்க முடியாமல் திணறிய நிலையில், பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வந்த பரிஸ் நகரத்தில் நோத்ர-தாம் தேவாலயத்தைக் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1200 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பரிஸ் நகரத்தில், 200.000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மிகவும் பெரிய சனத்தொகை என்பதால் இது இங்கு கட்டப்பட்டது.
1804 இலருந்து, அதாவது, நெப்போலின் காலத்தில் இருந்து மிகவும் பிரபல்யம் அடைந்த இந்தத் தேவாலயம், இன்று மில்லியன் கணக்கிலான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது.