அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
உயிர்ப்பு ஞாயிறு ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போதே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன் போது ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் பலி
சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.