வரும் கோடை கால விடுமுறையில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுலாப் பயணங்களைப் புலம்பெயர் தமிழர்கள் பலர் இரத்துச் செய்து வருகின்றனர்.
தமிழர்கள் அதிகமாகக் கூடும் தேவாலயங்களையும், விடுதிகளையும் இலக்கு வைத்துக் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொலைவெறி மனிதவெடிகுண்டுத் தாக்குதல்களை அடுத்தே இவ்வாறான இரத்துகள் இடம்பெறுவதாக புலம்பெயர் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தபடியாக யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், திருக்கேதீச்சரம், திருகோணேச்சரம் போன்ற சைவ வழிபாட்டுத் தலங்களையும், மடு தேவாலயத்தையும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இலக்கு வைக்கலாம் என்ற அச்சம் புலம்பெயர் தமிழர்களுக்கு எழுந்துள்ளது.
அத்தோடு இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமது பேச்சு வழக்கு மொழியாகத் தமிழ் மொழியைக் கொண்டிருப்பதால், தமிழீழ தாயகப் பகுதிகளில் அவர்களால் இலகுவாக ஊடுருவித் தாக்குதல்களை நிகழ்த்த முடியும் என்றும் புலம்பெயர் தமிழர்களில் பலர் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
இதனிடையே கோடை கால விடுமுறைக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு ஆகிய நகரங்களில் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம், பூப்புனித நீராட்டு விழா, திருமணப் பொன்விழா போன்ற நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.