Post Top Ad
Your Ad Spot
Live TV:
"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!
Tamil Web Radio(FM)
SOORIYAN.TV
!doctype>Thursday, July 18, 2019
Home
Unlabelled
பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது குறித்த தீர்மானம்!!
பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது குறித்த தீர்மானம்!!
கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன், பாண் உள்ளிட்ட தமது உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று (17) தீர்மானிக்கப்படவுள்ளதாக, வெதுப்பகம்(பேக்கரி) உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமையின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப, பேக்கரி உற்பத்திகளின் விலையை 3 ரூபா முதல் 5 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என, சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை நேற்று முதல் 7 ரூபாவால் அதிகரிப்பதற்கு, பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விற்பனை முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலையை 7 ரூபாவால் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை வரியுடன் சந்தையில் 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கும் என, பிறீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக 7 மாதங்களுக்கு முன்னர் மாவின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக, பிறீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
NJ News
BBC Tamil News World
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கனவுகளுடன் களமிறங்கும் இந்திய அணி முன்னுள்ள சவால்கள் - ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையைக் கைப்பற்றி, வெற்றிக்கான நீண்ட...3 hours ago
Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.