முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது?

Sunday, May 17, 2020

May 17, 2020
சென்னை: ஆம்பன் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வங்க கடலில் நேற்று இரவு ஆம்பன் புயல் உருவானது. தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது இந்த புயல் தீவிரம் அடைந்துள்ளது.
ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது.
அதேபோல் மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகத்தின் தெற்கு தென்மேற்கு பகுதியில் 1110 கி.மீ. தொலைவிலும் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருக்கிறது.இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும். வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. இதனால் புயலை எதிர்கொள்ள தீவிரமான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த புயலின் பாதிப்பு தமிழகத்தில் பெரிய அளவில் இருக்காது.
தமிழகத்தில் லேசான பாதிப்பு

தமிழகத்தில் லேசான பாதிப்பு

தமிழகத்தில் இந்த புயலால் லேசான பாதிப்பு மட்டுமே இருக்கும். முக்கியமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடல் அலை சீற்றத்துடன் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னிட்டு நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்று வேகம் அதிகரிக்கும்

காற்று வேகம் அதிகரிக்கும்

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் ஈரோடு, கரூர், சேலம், மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
கொங்கு மாவட்டங்கள்

கொங்கு மாவட்டங்கள்

இன்று இரவு முழுக்க கொங்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் மழை இருக்காது. அதேபோல் இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment

BBC Tamil News World

Random Post?max-results=6">');
    ?max-results="+numposts4+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts5\"><\/script>");