பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வது அவசியம்; உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல் - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Sunday, June 7, 2020

பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வது அவசியம்; உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முகக்கவசங்கள்  குறித்த தனது ஆலோசனையை மாற்றியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. 
ஆரோக்கியமான மக்கள் முகமூடி அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும்,  வைரஸ் பரவலாக பரவக்கூடிய மற்றும் சமூக இடைவெளி குறைந்த பொது போக்குவரத்து, கடைகள் அல்லது பிற வரையறுக்கப்பட்ட அல்லது நெரிசல் ஏற்படும் சூழல் போன்றவற்றில் முகக்கவசங்களைஅணியுமாறு அரசாங்கங்கள் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் மருத்துவ முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.  உலகளவில் கடந்த ஆண்டு இறுதியில் கொவிட் 19 கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, 67 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 400,000 பேர் உயிரிழந்துள்ளனர் என  ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot