யாழில் பரவும் மர்மக் காய்ச்சல்! குடும்பப் பெண் உயிரிழப்பு!! மேலும் சிலர் பாதிப்பு! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Jaffna FM

SOORIYAN.TV

NJ News

Sunday, June 7, 2020

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல்! குடும்பப் பெண் உயிரிழப்பு!! மேலும் சிலர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தில், இரத்த மாதிரி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
வண்ணார்பண்ணையை சேர்ந்த லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (40) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே நேற்று (6) உயிரிழந்துள்ளார். ஒருவிதமான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த புதன்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பல பாகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் வகை பற்றி இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை. அவர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகின்ற போதும், அது உறுதிசெய்யப்படவில்லை.
அவருக்கு ஏற்பட்ட தொற்று பற்றிய மேலதிக பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை இதேவிதமான மர்ம வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

No comments:

Post a Comment

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot