யாழ்/ புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த பசுவதை கும்பல் - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Saturday, October 3, 2020

யாழ்/ புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த பசுவதை கும்பல்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த கும்பலொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா ஆன பூசாரியை களவாணி திருடர்கள் கொலைசெய்தனர்.

இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
 
புங்குடுதீவு ஊர்தீவுச் சிவன் கோயில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், பசுவதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

பூசகரின் உதவியாளர் பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா வயது-32 என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் அச்சகரே கொலை செய்யப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். பூசகரின் பின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொலையில் ஈடுபட்டவர்கள் சி.சி.ரி.வி கமராக்களை புடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர். பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன், பூசகரின் உதவியாளரால் அழைத்து வந்து வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot