வவுனியா மாவட்டத்தில் தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று 26.11.2020 வியாழன் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் 3000 ரூபாய் பெறுமதியான 64 உலர் உணவுப்பொதிகள்,
காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட குறித்த 64 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.
இன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை நாளாகும். தம்மாலான உதவிகளை வழங்கி மக்கள் போராட்டங்களுக்கு பலம் சேர்க்கும் புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
Source:vavuniyacitizen
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.