காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில் சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28-ஆம் தேதி புயலாக மாறும்.
கனமழை
அவ்வாறு உருவானால் வடதமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. எனவே ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் புயலாக மாறும். இந்த தேதிகளில் கனமழை பெய்யும் என்றார்.
எச்சரிக்கை
மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த இரு தினங்களுக்கு தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ரெட் அலர்ட் ஏன்
மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம். மிக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றார் பாலசந்திரன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.