இந்த வெப்ப காலத்தை சமாளிப்பதற்காக இந்த ஏற்பாட்டினை நகரமண்டபம் முன்னெடுத்துள்ளது. மொத்தமாக 13 பூங்காக்கள் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை 24/7 மணிநேரமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப காலத்தை சமாளிப்பதற்காக இந்த ஏற்பாட்டினை நகரமண்டபம் முன்னெடுத்துள்ளது. மொத்தமாக 13 பூங்காக்கள் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை 24/7 மணிநேரமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Louis XIII (4e)
Grands Explorateurs (6e)
Boucicaut (7e)
Villemin (10e), (வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும்)
Émile Cohl (12e)
Georges Méliès (12e)
Louis Armstrong (13e)
Montsouris (14e)
Sainte-Périne (16e)
Louise Michel (18e), (வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும்)
Buttes Chaumont (19e)
Séverine (20e)
Aurélie Salel (20e)
ஆகிய 13 பூங்காக்கள் திறந்திருக்கும் எனவும்,
இந்த வாரத்தில் மாத்திரம்
Monceau (8th)
Marcel Pagnol (8th)
Montholon (9th)
Ferdinand Brunot (14th)
Georges Brassens (15th)
ஆகிய ஐந்து பூங்காக்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸை வாட்டி எடுக்கும் வெப்பம் : மூடப்பட்ட 300க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!
இன்று இல்-து-பிரான்ஸில் மாவட்டங்கள் உட்பட மொத்தம் 78 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 300 க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக 41°c வரை வெப்பம் நீடிப்பதால், இல்-து-பிரான்ஸுக்குள் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. Val-de-Marne இல் 156 பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
Essonne இல் 60 பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மீதமான பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதும், மாணவர்களின் வருகை மிக கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seine-Saint-Denis இல் 48 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் Aulnay-sous-Bois, Coubron, Rosny-sous-Bois Villepinte நகரங்களில் உள்ள பாடசாலைகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளன.
Seine-et-Marne இல் 32 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பரிஸ் மற்றும் Hauts-de-Seine இல் ஒருசில பாடசாலைகளை தவிர, மீதமான அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.